ADGSOM1 & ADGMIN1  
       
  LAUNCH OF THE 50TH ANNIVERSARY CELEBRATION OF RUKUN NEGARA  
       
  KL SUMMIT 2019  
       
  HAWANA 2018  
       
  AES 2016  
       

 
 
 

April 26, 2024 -Friday

 
  ஹேப்படைடிஸ் சி நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் பொதுநல சுகாதார முயற்சியில் மலேசியா முன்னணி வகிக்கின்றது

Monday 06/08/2018



- ஹேப்படைடிஸ் சி நோயைக் கண்டறியும் சோதனைச் செயல்திட்டங்கள் சார்ந்த, பரிசோதனை மற்றும் மேம்பாட்டு முன்னெடுப்புகளைச் செய்யும் பொருட்டு, Foundation for Innovative New Diagnostics (FIND)  மற்றும் Clinical Research Malaysia (CRM)  ஆகிய இரண்டு அமைப்புகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

- முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியானது Drugs for Neglected Diseases initiative (DNDi) மற்றும் மலேசிய சுகாதார அமைச்சு ஆகியவற்றின் தொடர் கூட்டுமுயற்சியின் அங்கமாகும், இந்நோயைக் கையாள்வதில் அரசாங்கத்தின் உலகளாய முயற்சியில் இது முக்கிய அம்சமாகும்.


புத்ராஜெயா, 6 ஆக்ஸ்ட் (Bernama) -- ஹேப்படைடிஸ் சி நோயைக் கண்டறியும் சோதனைச் செயல்திட்டங்கள் சார்ந்த, பரிசோதனை மற்றும் மேம்பாட்டு முன்னெடுப்புகளைச் செய்யும் பொருட்டு Foundation for Innovative New Diagnostics (FIND)  மற்றும் Clinical Research Malaysia (CRM)  ஆகிய இரண்டு அமைப்புகளும் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை (MOU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

CRM மலேசிய சுகாதார அமைச்சின்கீழ் இயங்கிவரும் இலாப நோக்கமற்ற அரசாங்க நிறுவனமாகும், இதன் பணிகள் இந்நோயைக் கையாள்வதில் அரசு எடுத்துவரும் தொடக்ககட்ட முன்னெடுப்புகளுக்கான பரிசோதனை மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுமாகும். இந்த முயற்சி Drugs for Neglected Diseases initiative (DNDi)-உடன் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகும், அதோடு, இது FIND-இன் Hepatitis C Elimination through Access to Diagnostics (HEAD-Start) எனும் பெருமுயற்சியின் ஓர் அங்கமாகவும் விளங்குகிறது. இதற்கு Unitaid ஆதரவு வழங்குகின்றது. இத்திட்டத்தில் பங்குகொண்டுள்ள அதிக-நடுத்தர வருமானம் பெறும் ஒரே நாடு மலேசியா மட்டுமேயாகும்.

"FIND-உடன் இணைந்து இந்த பரிசோதனை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கெடுப்பது பெருமையான விஷயமாகும், இதன் வழி குறைந்த செலவிலான மற்றும் தொடக்க நிலையிலேயே ஹேப்படைடிஸ் சி நோயை கண்டறிவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். உலகளவில் நம்பப்படும் அமைப்பாக உருவாகும் நமது இலட்சியம் மற்றும் மலேசியர்கள் அதிகம் கரிசனம் கொள்ளும் விஷயத்தில் ஆய்வுகளை மேற்கோள்ளும் முயற்சி ஆகியவற்றை நனவாக்க FIND-உடன் இணைந்து நம்மால் இயன்ற மட்டும் செயல்படுவோம்" என Clinical Research Malaysia-வின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் அக்மால் யூசோ·ப் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு (WHO) பலவிதமான HCV பரிசோதனைகள், பக்கவிளைவுகளை கண்டறிதல், பாதிப்புக்குள்ளாகும் மக்களை அடைவதில் கடினம் போன்றவற்றில் தகுதிப்பெற்றிருந்தாலும் மையப்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள், நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாப்பில் இணைக்கப்படுவதில் கடினம் மற்றும் சிகிச்சை போன்றவை ஒரு சவாலாகவே இருக்கிறது. மையமாக்கப்படாத ஆரம்ப சுகாதார பராமரிப்பில் Rapid Diagnostic Tests (RDTs) பயன்படுத்தி செயலாக்கம் செய்யும் வசதிகளையும் இத்திட்டத்தைச் செயல்படுத்த மலேசியா சுகாதார அமைச்சுக்குத் தொழில்நுட்ப உதவிகள் செய்யும் சாத்தியத்தையும் FIND விளக்கும்.

"RDTs களின் அறிமுகமும் எளிமையான நோயெதிர்ப்பு வழிமுறைகளும் ஹெபடைடிஸ் சி கவனிப்பு (Hepatitis C care) அளவைக் குறைப்பதில் ஒரு முக்கியமான படியாகும்" என்று FIND-இன் தலைமை நிர்வாக அதிகாரி Catharina Boehme கூறினார். "மலேசிய அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும், உருவாக்கிய சான்றைப் பயன்படுத்தி தேசியக் கொள்கை (National Policy)- க்குத் தெரிவிப்பதை உறுதிப்படுத்துவத்தின் மூலம் அதிகமான மக்கள் தங்கள் நிலையை அறிந்து care cascade-இல் வர செய்வதிற்கும் CRM உடனான இந்த MOU  வழிவகுக்கும்."
 
அனைத்து நோயாளிகளையும் உலக சுகாதார அமைப்புடன் முன்தகுதி Diagnostic tests செய்து HCV (viraemia) இருப்பதைக் உறுதிச்செய்யப்பட்டவர்களை மட்டும் இவ்வாய்வில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படும் முறை:
 
- ஒன்று, DNDi நிறுவனத்துடன் மலேசிய சுகாதார அமைச்சு இணைந்து, புதிய மாற்று சிகிச்சையில் sofosbuvir-உடன் பரிசோதிக்கப்பட்ட மருந்தான ravidasvir-ஐ இணைத்து கொடுக்கும் முறையில் பயன் மற்றும் பாதுகாப்பு திறனை மதிப்பிட வடிவமைக்கப்படுகிறது.  ஏப்ரல் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் கட்ட மதிப்பிட்டின் முடிவுகள்,
கடினமான சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகள் உட்பட நோயாளிகளுக்கு மிக உயர்ந்த குணப்படுத்தும் விகிதம் இருப்பதாகவும் இவ்விணை மருந்துகள் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் காணப்படுகிறது;
 
- அல்லது, மலேசிய தேசிய HCV திட்டத்தின் மூலம், நாட்டில் சிகிச்சைப்பெற விருப்பம் உள்ளவர்களைத் தொடர்ந்து, அதிக விலையுயர்ந்த HCV சிகிச்சையின் செலவினத்தைக் கட்டுப்படுத்த, இப்போது 21 அரசு மருத்துவமனைகளில் இலவச Hepatitis C சிகிச்சை (sofosbuvir / daclatasvir) வழங்கப்படுகிறது.
 
CRM-இன் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் அக்மால் யூசோ·ப் மற்றும் FIND-இன் தலைமை அணுகல் அதிகாரி திரு. சச்சரி காட்ஸ் ஆகியோர் MOU-வில், சுகாதார அமைச்சர் ஒய்.பி டாக்டர் ட்ழுல்கேப்லி அகமது, சுகாதார இயக்குனர், YBhg Datuk டாக்டர் நூர் ஹிசாம், சுகாதார இணை இயக்குனர் (Research & Technical Support), YBhg. டாக்டர் ஷாநஸ் முராட், National Clinical Research Centre (CRC) இயக்குனர் YBhg Dato டாக்டர் கோ பிக் பின் மற்றும் FIND, HCV & HIV unit தலைவர், டாக்டர் பிரான்செஸ்கோ மரினுசிசி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர்.
 
Hepatitis C பற்றி
 
உலகத்தில் உள்ள தொற்று நோய்களில் ஒன்று HCV ஆகும். இது பொதுவாகப் பாதுகாப்பற்ற சுகாதார பராமரிப்பு மற்றும் போதை மருந்து ஊசி பயன்பாடு மூலம் ஏற்படுகிறது. உலகளாவிய அளவில், 71 கோடிக்கும் அதிகமானோர் நீண்டகாலமாக இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80% க்கும் அதிகமானோர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் (LMICs) வாழ்கின்றனர், ஆனால் ஐந்து பேரில் ஒரே ஒரு நபருக்கு மட்டும் தங்களுக்கு இந்நோய் இருப்பதை அறிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 மக்கள் மரிக்கிறார்கள், இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது, உலகளாவிய சுகாதார முன்னுரிமையாக இதைக் கருதி: உலக சுகாதார அமைப்பு (WHO) 2030 ஆம் ஆண்டில் Hepatitis C நோயை நீக்குவதற்கான இலக்கை நிர்ணயத்துள்ளது. மலேசியாவில், HCV நோய் சுமை அதிகமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், வருகின்ற ஆண்டுகளில் இறப்புக்கள் அதிகரித்து, 2039ஆம் ஆண்டு 63,900 HCV தொடர்பான இறப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
 
CRM பற்றி
 
2012 ஆம் ஆண்டில் மலேசிய சுகாதார அமைச்சால் CRM நிறுவப்பட்டது. இது தரமான உலக சுகாதாரம், மக்களுக்கு பிரகாசமான அதிக நம்பிக்கை தரும் எதிர்கால தீர்வுகளை முன்னெடுக்கவும் தரமான ஆய்வுகள், மருத்துவ ஆராய்ச்சி உதவி மூலம் நம்பகமான முடிவுகளையும் கொடுக்கிறது. இது அரசு அமைச்சுக்களின் ஆதரவுடன் இணைந்து செயல்படும் ஒரு ஆய்வகம். CRM உள்ளூர் மருத்துவ  ஆராய்ச்சிக்கான வளர்ச்சி பற்றி புரிந்துகொண்டு, சர்வதேச தரநிலைகளுடன் அரசு அமைச்சுவுடன் சிகிச்சை மற்றும் உயர் திறமையான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் தகவலுக்கு: www.clinicalresearch.my
 
FIND பற்றி
 
2003-ஆம் ஆண்டில் FIND உலகளாவிய இலாப நோக்கமற்றதாக நிறுவப்பட்டு தற்போது மலேரியா, காசநோய், HIV / AIDS, தூக்க நோய்கள், Hapatitis C, leishmaniasis, Chagas நோய், குடல் புண், மலேரியா காய்ச்சல் மற்றும் Ebola போன்ற திடீரென ஏற்படும் நோய்கள் தொடர்பான சிகிச்சைக்கான தரத்தை மேம்படுத்துதல், மதிப்பீடு செய்தல் விநியோகம் செய்தல் மற்றும் குறைந்த விலையில் diagnostic tests செய்தல் ஆகியவை அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகிறது. FIND, நல்ல செயலாக்கமும், தர உத்தரவாதம் மற்றும் ஆய்வகங்களை வலுப்படுத்தும் பணியையும் செய்கிறது. FIND-க்கு உலகளாவிய 200 க்கும் மேற்பட்ட நிறுனங்களுடன் பங்கு உள்ளது. அதில், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்கள், சுகாதார அமைச்சுக்கள் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டங்கள், வணிகப் பங்காளிகள், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக WHO மற்றும் மருத்துவ சோதனை தளங்கள் அடங்கும். மேலும் தகவலுக்கு: www.finddx.org
 
Source: Clinical Research Malaysia

ஊடக தொடர்புகள்
CRM
திரு சையத் ஹம்சா
வணிக மேம்பாடு
Tel : +6(03) 7960 5153 (ext. 121)
Email : hamzah@clinicalresearch.my
 
FIND
சாரா-ஜேன் லவ்வே,
தலைவர் தகவல் தொடர்பு
Tel : +41 (0) 22 710 27 88 /  +41 (0) 79 431 62 44
Email : media@finddx.org
 
--BERNAMA

 
 
 

Copyright © 2024 MREM . All rights reserved.